A hard disk drive (HDD), hard disk, hard drive or fixed disk is a data storage device that uses magnetic storage to store and retrieve digital information using one or more rigid rapidly rotating disks (platters) coated with magnetic material. |
ஒரு வன் வட்டு இயக்கி (HDD) அல்லது வன் வட்டு அல்லது நிலையான வட்டு என்பது காந்தப் பொருட்கள் மூலம் பூசப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திடமான, வேகமாகச் சுழலும் வட்டங்களை (தட்டுகள்) பயன்படுத்தி, இலக்கமுறை தகவல்களைச் சேமித்து, அவற்றை மீட்டெடுக்க காந்த சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும் ஒரு தரவு சேமிப்புத் தொகுப்பாகும். |
The platters are paired with magnetic heads, usually arranged on a moving actuator arm, which read and write data to the platter surfaces. |
இந்த தட்டுகள் காந்த தலைகளுடன் இணைக்கப்பட்டிருப்பதுடன், அவை பொதுவாக நகரும் செயல்படுத்தி கையில் அமைக்கப்பட்டிருப்பவையாகும். இவை தட்டு மேற்பரப்புகளில் உள்ள தரவுகளைப் படிக்கவும் எழுதவும் செயற்படுகின்றன. |
Data is accessed in a random-access manner, meaning that individual blocks of data can be stored or retrieved in any order and not only sequentially. |
தரவு சீரற்ற அணுகல் முறையில் அணுகப்படுகிறது, அதாவது தனிப்பட்ட தரவுத் தொகுதிகளை தொடர்ச்சியாக மட்டுமல்லாமல், எந்த வரிசையிலும் சேமிக்கவோ அல்லது மீட்டெடுக்கவோ முடியும். |
HDDs are a type of non-volatile storage, retaining stored data even when powered off. |
HDDகள் ஒரு வகை நிரந்தரச் சேமிப்பகம் ஆகும், இவை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் சேமிக்கப்பட்ட தரவுகளை தக்க வைத்துக் கொள்ளும். |
Introduced by IBM in 1956, HDDs became the dominant secondary storage device for general-purpose computers by the early 1960s. |
1956 ஆம் ஆண்டு IBM ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட HDDகள், 1960 களின் முற்பகுதியில் பொது நோக்கத்திற்கான கணினிகளுக்கான முக்கிய இரண்டாம் நிலை சேமிப்பக சாதனமாக மாறியது. |
Continuously improved, HDDs have maintained this position into the modern era of servers and personal computers. |
தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, HDDகள் சர்வர்கள் மற்றும் தனிநபர் கணினிகளின் நவீன சகாப்தம் வரை இந்த நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. |
More than 200 companies have produced HDDs historically, though after extensive industry consolidation most current units are manufactured by Seagate, Toshiba, and Western Digital. |
வரலாற்று ரீதியாக 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் HDDகளை தயாரித்துள்ளன, இருப்பினும் விரிவான தொழில் ஒருங்கிணைப்புக்குப் பிறகு பெரும்பாலான தற்போதைய அலகுகள் Seagate, Toshiba மற்றும் Western Digital ஆகியவற்றால் தயாரிக்கப்படுகின்றன. |
HDD unit shipments and sales revenues are declining, though production (exabytes per year) is growing. |
HDD யூனிட் ஏற்றுமதி மற்றும் விற்பனை வருவாய் குறைந்து வருகிறது, இருப்பினும் உற்பத்தி (ஆண்டுக்கு எக்சாபைட்டுகள்) வளர்ந்து வருகிறது. |
Flash memory has a growing share of the market for secondary storage, in the form of solid-state drives (SSDs). |
இரண்டாம் நிலை சேமிப்பக சந்தையில், திட-நிலை இயக்கிகள் (SSDகள்) வடிவில் ஃபிளாஷ் நினைவகம் வளர்ந்து வரும் பங்கைக் கொண்டுள்ளது. |
SSDs have higher data-transfer rates, higher areal storage density, better reliability, and much lower latency and access times. |
SSDகள் அதிக தரவு பரிமாற்ற விகிதங்கள், அதிக பகுதி சேமிப்பு அடர்த்தி, சிறந்த நம்பகத்தன்மை மற்றும் மிகக் குறைந்த தாமதம் மற்றும் அணுகல் நேரங்களைக் கொண்டுள்ளன. |
Though SSDs have higher cost per bit, they are replacing HDDs where speed, power consumption, small size, and durability are important. |
SSDகள் ஒரு பிட்டுக்கு அதிக விலையைக் கொண்டிருந்தாலும், வேகம், மின் நுகர்வு, சிறிய அளவு மற்றும் ஆயுள் ஆகியவை முக்கியமாக கருதப்படுகின்ற இடங்களில் HDDகளை அவை பதிலிடுகின்றன. |
The primary characteristics of an HDD are its capacity and performance. |
ஒரு HDD இன் முதன்மை பண்புகள் அதன் கொள்ளளவு மற்றும் செயல்திறன் ஆகும். |
Capacity is specified in unit prefixes corresponding to powers of 1000: a 1-terabyte (TB) drive has a capacity of 1,000 gigabytes (GB; where 1 gigabyte = 1 billion bytes). |
கொள்ளளவானது 1000 இன் வலுக்களுக்கு ஒத்த அலகு முன்னொட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது: ஒரு 1-டெராபைட் (TB) HDD ஆனது 1,000 ஜிகாபைட்கள் (GB; இங்கு 1 ஜிகாபைட் = 1 பில்லியன் பைட்டுகள்) கொள்ளளவு கொண்டது. |
Typically, some of an HDD's capacity is unavailable to the user because it is used by the file system and the computer operating system, and possibly inbuilt redundancy for error correction and recovery. |
பொதுவாக, ஒரு HDD-யின் கொள்ளளவின் சில பகுதி பயனருக்குக் கிடைக்காது, ஏனெனில் அது கோப்பு முறைமை மற்றும் கணினி இயக்க முறைமையால் பயன்படுத்தப்படுகிறது, மேலும் பிழை திருத்தம் மற்றும் மீட்டெடுப்பிற்கான உள்ளமைக்கப்பட்ட மிகைப்படுத்தலாக இருக்கலாம். |
Performance is specified by the time required to move the heads to a track or cylinder (average access time) plus the time it takes for the desired sector to move under the head (average latency, which is a function of the physical rotational speed in revolutions per minute), and finally the speed at which the data is transmitted (data rate). |
செயல்திறன் என்பது, தலைகளை ஒரு பாதைக்கு அல்லது சிலிண்டருக்கு நகர்த்த தேவையான நேரம் (சராசரி அணுகல் நேரம்) மற்றும் விரும்பிய பகுதி தலைக்குக் கீழே நகர்த்த தேவையான நேரம் (சராசரி தாமதம், இது நிமிடத்திற்கு எத்தனை மடங்குகள் திருப்பப்படுகிறது என்ற பௌதீக சுழற்சி வேகத்தின் செயல்பாடாகும்), இறுதியாக தரவு அனுப்பும் வேகம் (தரவு விகிதம்) ஆகியவற்றால் குறிப்பிடப்படுகிறது. |
The two most common form factors for modern HDDs are 3.5-inch, for desktop computers, and 2.5-inch, primarily for laptops. |
நவீன HDDகளின் இரண்டு மிக பொதுவான வடிவ அளவுகள் 3.5 அங்குலம், டெஸ்க்டாப் கணினிகளுக்கானது, மற்றும் 2.5 அங்குலம், முதன்மையாக லேப்டாப்புகளுக்கானது. |
HDDs are connected to systems by standard interface cables such as PATA (Parallel ATA), SATA (Serial ATA), USB or SAS (Serial attached SCSI) cables. |
HDDகள் கணினிகளுடன் பின்வரும் தரவமைப்பு இடைமுகக் கேபிள்கள் மூலம் இணைக்கப்படுகின்றன: PATA (Parallel ATA), SATA (Serial ATA), USB அல்லது SAS (Serial attached SCSI) கேபிள்கள். |
F |
ப |